உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் திடீர் சோதனை

மன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டிகள் நேற்று வியாழக்கிழமை(19) மாலை திடீர் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.

-மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் 25 முச்சக்கர வண்டிகள் இவ்வாறு சோதனைக்கு உற்படுத்தப்பட்டது.

-மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

-மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி எஸ்.ஐ.ஏக்கநாயக்க தலைமையில் இடம் பெற்ற குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது வாகன பரிசோதகர் திஸாநாயக்க கலந்து கொண்டு பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் நிலை தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

-மேலும் பாடசாலை சேவையினை மேற்கொள்ளும் முச்சக்கர வண்டிகள் எவ்வாறு இருக்க வேண்டும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு,உரிய முறையில் பாடசாலை முச்சக்கர வண்டிகளை வைத்திருக்காதவர்கள் , பாதுகர்பற்ற முறையில் சேவையினை மேற்கொள்ளுவோர் எச்சரிக்கப்பட்டனர்.

-குறித்த பரிசோதனை நிகழ்வில் மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-

 

கருத்து தெரிவிக்க