உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

அதிர்பர்களுக்கான கொடுப்பனவும் நியமனமும் வழங்கப்படும்!

நுவரெலியா மாவட்ட ஹங்குராங்கெத்த வலயத்தில் காணப்படும் தமிழ் பாடசாலைகளின் குறைகளை நிகர்த்தி செய்யும் முகமாக 2019.09.19 மலையக ஆசிரியர் முன்னணிக்கும் மத்திய மகாண பிரதான அமைச்சினதும் கல்வி அமைச்சினதும் செயலாளருமான காமினி ராஜரட்ண அவர்களுடனான சந்திப்பொன்று மத்திய மாகாண பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது மலையக ஆசிரிய முன்னணியின் பொதுச்செயலாளர் சி. இரவீந்திரன் முன்னணியின் ஆலோசகரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான இரா. இராஜாராம் ஹங்குராங்கெத்த வலய தலைவர் எஸ். மகேந்திரன் செயலாளர் எஸ். கேதீஸ்வரன் உட்பட அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

· கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான கொடுப்பனவுகளும் அவர்களுக்கான நியமனக் கடிதமும் விரைவில் வழங்கப்படும்.

· 1425 உதவி ஆசிரியர்களை மிக விரைவில் தரம் 3ஐ ற்கு உள்ரூடவ்ர்த்தல்.

கஸ்டப்பிரதேச அதிகஸ்டப்பிரதேச பாடசாலைகளாக இனங்காணப்பட்டும் கொடுப்பனவுகள் வழங்கப்பாடாத பாடசாலைகளுக்கும் அதேபோன்று இனங்காணப்பட்ட குளிர்ப்பிரதேச கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டிய பாடசாலைகளுக்குமான கொடுப்பனவுகள் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படும்.

அதிபர்களை இடம் மாற்றும் பொழுது தகுதியான இடமாற்றச் சபை ஒன்றின் மூலமே அவர்களுக்கான இடம் மாற்றம்
மேற்கொள்ளப்படும்.

ஒரே பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு வலயத்திலும் தொலைதூரத்திலிருந்து வந்து கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் விடுதி அமைக்கப்படும்.

வலயத்தில் ஒப்படைக்கப்படும் ஆசிரியர்களின் ஆவணங்கள் சரியான முறையில் பராமரிக்காமல் காணாமல் போவதும் கொடுக்கின்ற ஆவணங்களுக்கு வகைக்கூறல் இல்லாமையினாலும் சிறமத்திற்கு உள்ளாகும் ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் நீக்குவதற்காக ஓர் பொறிமுறை அமைக்கப்படும்.

கோப்புகளில் காணப்படும் குறைப்பாடுகளை உடனுக்குடன் இனங்கண்டு அக்குறைப்பாடுகளை பாடசாலை அதிபர்களுக்கு வலயத்தால் அறிவிக்கப்படுதல் வேண்டும்.

ஆசிரியர்களுடைய நேரத்தை கற்பித்தல் நடவடிக்கைகளில் தொய்வுறாமல் ரூடவ்டுபடுத்துவதற்காகவும் சிரமத்தையும் நேரத்தையும் தவிர்த்துக் கொள்வதற்காகவும் ஆசிரியர்களுடைய கோப்புகளில் காணப்படும் குறைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளை அதிபர்களே செய்வதற்கு அனுமதித்தல்.

மேலதிக ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் பாடசாலைகளிலிருந்து அவ்வாசிரியர்களை தேவையுள்ள பாடசாலைகளுக்கு இடம்மாற்றம் செய்தல். போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டு மிக சுமுகமான முறையில் தீர்வுகள் எட்டப்பட்டன.

இச்சந்திப்பின் போது எட்டபட்ட தீர்வுகள் அனைத்தும் மாகாணத்தின் சகல வலயத்திலும் உடன் அமுல் படுத்தப்படும் என மாகாண கல்வி செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க