சினிமா

மீண்டும் படமாகும் மோடியின் வாழ்க்கை வரலாறு

டீக்கடையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து, நாட்டின் பிரதமராக முன்னேறியிருக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை பயணம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மக்கள் மத்தியில் இருக்கிறது. நரேந்திர மோடியின் பள்ளிக்கால வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கெனவே ஒரு சிறப்பு திரைப்படம் கடந்த மே மாதம் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து இன்னொரு படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். இதுகுறித்து சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: நரேந்திர மோடியின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்றும் மோடியின் இளமை கால வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படமாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க