உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ ஜனாதிபதி முறைமையை நீக்க இடமளியோம்’ – விமல் சூளுரை

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான  விமல்வீரவன்ஸ இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.

அத்துடன், க கோட்டாபய ராஜபக்சவின் வெற்றி ருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளதாலேயே ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு திரைமறைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தோல்விபீதியால் ஜனாதிபதியும், பிரதமரும் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்றும், இதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களின் இந்த முயற்சி வெற்றிபெறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக நாட்டின் அரசியலமைப்புடன் விளையாட வேண்டாம் எனவும் கூறிவைக்க விரும்புகின்றோம்.

நவம்பர் 16 ஆம் திகதிக்கு பிறகு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கு வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதால் கௌரவமான முறையில் விடைபெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பாக இறுதி காலப்பகுதியிலானது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்வது குறித்து ஜனாதிபதி சிந்திக்க வேண்டும்.

ஏனெனில் எந்த கொம்பனை களமிறக்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே வெற்றிபெறுவார்என்பதை கருத்து கணிப்புகள் உறுதிப்படுத்திவிட்டன. அதன்காரணமாகவே ஜனாதிபதி முறையை அழித்து ஜனநாயக்தை குழிதோண்டி புதைப்பதற்கு முற்படுகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காது.” என்றார்.

கருத்து தெரிவிக்க