வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இன்று காலை தமது சாலைக்கு முன்பாக டயர்களை போட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாட்களாக இலங்கை பொக்குவரத:து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றிலிருந்து மூன்றாவது நாளாக நடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ மக்களின் நலன் கருதி தமது சேவையினை ஆரம்பிப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்தே டயர்களை போட்டு எரித்தனர்.
இதன்பொது தமது சம்பளத்தினை அதிகரி, ஒப்பந்த வேலையாட்களை நிரந்தராமாக்கு என்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது போராட்ட இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் மக்கக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தமது சாலையின் முன் வாயிலில் காட்டியுள்ள இ. போ.ச ஊழியர்கள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தமது போராட்டத்தின் வடிவம் மாறும் எனவும் எச்சரித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க