உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மன்னாரில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் இன்று புதன் கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 8 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் 24 மணி நேர அடையாளப் பணிப்பக்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிவிக்கப்படுகின்றது.
இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் நுழைவாயிலுக்கு அருகில் ‘ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகளினால் எதிர் காலத்தில் வடக்கு-கிழக்கில் வைத்தியர்களின் அதீத தட்டுப்பாடு ஏற்படும் ஆபாயம்’ எனும் வசனம் எழுதப்பட்ட பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளமையினால் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க