பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 3 ஆவது நாளாக இன்று புதன் கிழமை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனினும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் மன்னாரில் இருந்து மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சோவை பேரூந்துகள் விசேட சேவையை முன்னெடுத்து வருகின்றது.
மன்னாரில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை சேவைகள் முழுமையாக மூன்றாவது நாளாகவும் இன்று (18) ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்காக 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் சம்பள அதிகரிப்பு இடம் பெற்று ஒராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய சம்பளமான 2500 ரூபாய் இந்த ஆண்டின் ஜுலை மாதத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்களினால் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் சாலை ஊழியர்கள் இன்று புதன் கிழமை (18) 3 ஆவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க