நெஞ்செரிச்சல் என்பது செமிபாட்டு பிரச்சனையால் ஏற்படுவது. இதனால் சில வேளைகளில் முதுகு வலியும் உண்டாகும். வயிற்றில் உள்ள அமிலங்கள் உங்கள் உணவுக் குழாயில் பின்னோக்கி வரும் போது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள்
மதுபானம்
செயற்கையான குளிர்பானங்கள்
உறைப்பு அதிகமான உணவுகள்
தயிர்
புதினா
தக்காளிப்பழம்
கோப்பி
வெள்ளைப்பூடு
நெஞ்செரிச்சலுக்கான பொதுவான அறிகுறியாக மார்பு பகுதியில் வெப்பமான உணர்வு ஏற்படும். சில நேரங்களில் மார்பிலும் தொண்டையிலும் எரிச்சல் ஏற்படும். இவை வயிற்றில் உள்ள அமிலத்தால் ஏற்படுகிறது.
மேலும் இரவு சாப்பிட்ட பின் மார்பின் நடுவில் எரிச்சல் உணர்வு ஏற்படும்.
நெஞ்செரிச்சலை தவிர்ப்பதற்கு கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
அளவான உணவை உட்கொள்ள வேண்டும்.
சாப்பிட்ட உடன் நித்திரை கொள்வதை தவிர்க்கவும்.
சாப்பிடும் போது நேராக இருந்து சாப்பிட வேண்டும்.
புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
கருத்து தெரிவிக்க