பொன்மொழிகள்

மனிதன்! திரு.வி.க

  • மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக மாட்டார். இயற்கையை ஒட்டி வாழும் தெய்வீக வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் பொருளில்லை.
  • மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.
  • மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.

கருத்து தெரிவிக்க