உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

புல்மோட்டை சூட்டுச்சம்பவம்; கடற்படையினருக்கு பினை!

புல்மோட்டை சூட்டுச்சம்பவம் அடையாள அணிவகுப்பின் கடற்படையினருக்கு பினை
வழங்கப்பட்டது.

திருகோணமலை புலமோட்டை கடற்பரப்பில் 28.08.2019 அன்று அதிகாலையில்
கடற்படையினரின் உத்தரவை மீறீச்செல்லமுற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில்
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் தொடர்பாக
புல்மோட்டையைச் சேர்ந்த நான்க மீனவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த நான்கு மீனவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருந்தார்.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

தாக்குதலில் ஈடுபட்டார்கள் என குற்றச்சாட்டப்பட்ட கடற்படையினர் நீதிமன்றில்
பிரசன்னமாயிருந்த வேலையில் அவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற பிரதம நீதிவான்
எம்.எச்.எம்.ஹம்சா சந்தேக நபர்களான இரு அதிகாரிகள் மற்றும் பத்து சிப்பாய்களையும்
எதிர்வரும் 16 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பா கடற்படையினரால் இன்று பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில்
கோரப்பட்டது.

அதன் அடிப்படையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற பிரதம நீதிவான்
எம்.எச்.எம் ஹம்சா அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்டார்.

மேலும் அடையாள அணிவகுப்பின் போது தாக்குதலுக்கு உட்பட்ட மீனவர்களால் எட்டு கடற்படையினர் அடையாளங்காணப்பட்டனர்.

அதனை அடுத்து இரண்டு அதிகாரிகள் உட்பட 12 கடற்படையினருக்கு பிணை வழங்க
நீதிவான் எம்.எச்.எம்.ஹம்சி உத்தரவிட்டார்.

அதனை அடுத்து இரண்டு அதிகாரிகள் உட்பட 12 கடற்படையினருக்கு இரண்டு லட்சத்திற்கு சரீர பிணை வழங்க நீதிவான் எம்.எச்.எம்.ஹம்சி உத்தரவிட்டார்.

தொடர்ந்து எதிவரும் 16ம் திகதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க