உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தப்புகிறது ரணிலின் ‘தலை’ – கைகொடுக்கிறது கட்சி யாப்பு!

“ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபரே கட்சியின் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும்” என்ற சரத்து ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டிலேயே குறித்த சரத்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஐ.தே.கவின் பொதுச்செயலாளராக செயற்பட்ட காமினி அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட முக்கிய யோசனையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிக்கா அம்மையார், ஏதேனும் வழிமுறையின்கீழ் ஐ.தே.கவின் உறுப்புரிமையை பெற்றுவிட்டால், கட்சி தலைமையும் பறிபோய்விடும் என சட்ட ரீதியாக முன்வைக்கப்பட்ட தர்க்கத்தையடுத்தே மேற்படி சரத்து நீக்கப்பட்டுள்ளது எனவும் சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

எனவே, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கி வெற்றிபெற்றால்கூட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்படாது.

கருத்து தெரிவிக்க