நாட்டிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் இன வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் விரும்பவில்லை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா
நாட்டிலுள்ள அனைத்து இன, சமூக மக்களிலும் பெரும்பாலானோர் இன வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் விரும்பவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை 10.09.2019 ஏறாவூரில் இடம்பெற்ற அவரது விஜயத்தின்போது பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டன.
முன்னதாக செவ்வாய்க்கிழமை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 150 பயனாளிக் குடும்பங்களுக்கு அடிப்படைச் சுகாதார வசதிகளைச் செய்துகொள்வதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, நான் தென் மாகாணத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும் கிழக்கு மாகாண மக்களின் சமூக சகவாழ்வுக்கான தேவையைப்பற்றி நன்கு அறிவேன்.
சௌக்கியமாக வாழ்வதற்கு சுகாதார வசதிகளுடன் வாழத்தேவையான வாழ்விடங்கள் தேவை.
இந்த நாட்டில் வாழ்கின்ற அகிம்சையை விரும்பும் மக்கள் இன மத பேதங்களைக் கடந்து ஆதங்கப்படுகின்ற ஒரு விடயம் சமாதானம்.
இந்த நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் நீண்ட காலமாக ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் வாழ்ந்து வந்த வரலாறுகள் இருக்கின்றன.
அதேபோலத்தான் எதிர்காலத்தையும் நாம் இன மத பேதங்களைகப் கடந்து இலங்கையர் என்ற அடிப்படையில் எதிர்கால சந்ததிக்கு சமாதான தேசத்தைக் கையளிக்க வேண்டும்.
உலகத்திலும் இலங்கையிலும் அதிகமததிகம் உச்சரிக்கப்படுகி;னற சொல்தான் சமாதானம் எனவே அந்த சமாதானத்தை வாய்ச் சொல் அளவில் மாத்திரம் கடைப்பிடிக்காமல் செயலில் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
சமாதானத்தைச் சீர்குலைத்து வன்முறைகளைத் திணித்து அழிவுகளில் ஆட்சி செய்யவேண்டும் என்று அஹிம்சையான மக்கள் ஒருபோதம் விரும்புவதில்லை.
இப்பொழுது எனக்கு கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களோடு மக்களாகச் சேர்ந்து கருத்துப் பரிமாறக் கிடைத்த சந்தர்ப்பதை;தையிட்டு நான் பெருமயைடைகின்றேன்.
எதிர்காலத்தில் குறிப்பாக அடுத்த வருடமளவில் அதிகளான பொதுச் சேவைகளை இந்த மாகாணத்திலுள்ள அனைத்து சமூகத்தாருக்கும் செய்ய முடியமு; என நான் உறுதிகூறுகின்றேன்.” என்றார்.
அன்றைய தினம் ஏறாவூர் அல்அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பௌதீக வளத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக அங்கு கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிழ்விலும் ஆளுநர் கலந்து கொண்டார்.
கருத்து தெரிவிக்க