வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தில் இன்று முதல் தமிழ் விருட்சம் அமைப்பினால் பாடசாலை அதிபர் தலைமையில் சத்துணவாக தினமும் பால் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் விருட்சம் அமைப்பினரின் வேண்டுகோளினடிப்படையில் லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்கை அம்மன் ஆலயத்தினரால் வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தில் பால் சத்துணவு (கடலை) வழங்கும் திட்டம் பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்கை அம்மன் ஆலயத்தலைவர் உள்ளிட்டவர்களின் சேவையைப்பாராட்டி தமிழ் விருட்சம் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்கை அம்மன் ஆலயத்தலைவர் சொக்கலிங்கம் கருணைலிங்கம், செயலாளர், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர் பவாணி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க