” ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவேன் என சஜித் பிரேமதாச எழுத்துமூலம் உத்தரவாதமளித்தால் விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராகவே இருக்கின்றேன்.”
இவ்வாறு தனக்கு நெருக்கமான உறுப்பினர்களிடம் எடுத்துரைத்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ரணில், சஜித், கருஜயசூரிய ஆகிய மூவருக்குமிடையில் இன்று மாலை முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இதன்போது பிரதமரால் மேற்படி நிபந்தனை முன்வைக்கப்படும் என்றும், இதற்கு சஜித் பச்சைக்கொடி காட்டினால் ஜனாதிபதி தேர்தலில் அவரை ரணில் களமிறக்குவார் என்றும் தெரியவருகின்றது.
குறித்த நிபந்தனைக்கு சஜித் உடன்படாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாது எனவும் அறியமுடிகின்றது.
கருத்து தெரிவிக்க