சொத்துகள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தாத அமைச்சரவை அந்தஸ்த்துள்ள 8 அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘ ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல்’ எனும் அரசசார்பற்ற நிறுவனமே குறித்த முறைப்பாட்டை இன்று 10 முன்வைத்துள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான சொத்துகள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை ஜுன் மாத இறுதிக்குள் வெளியிடுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், அக்காலப்பகுதிக்குள் இவர்கள் வெளியிடவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சொத்து விபரத்தை வெளியிடாத அமைச்சர்கள் விபரம்,
1.சஜித் பிரேமதாச.
2.மனோ கணேசன்.
3.ரவி கருணாநாயக்க.
4.நவீன் திஸாநாயக்க.
5. கயந்த கருணாதிலக்க.
6.ஹரின் பெர்ணான்டோ.
7.அப்துல் ஹலீம்.
8.அகிலவிராஜ் காரியவசம்.
கருத்து தெரிவிக்க