ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் இவ்வாரம் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குமாறு அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். எனினும், இதற்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு ரணிலும் அவரின் சகாக்களும் மறுப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதனால் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து கடும் சொற்சமரில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிரதமர் ரணிலுக்கும், பிரதித் தலைவர் சஜித்துக்குமிடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சும் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. நாளை (10) மேற்படி சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்டாலும் அது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு சஜித்துக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால் அவர் மாற்று நடவடிக்கையில் இறங்குவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கருத்து தெரிவிக்க