19வது அரசியலமைப்பின் கீழ் அடுத்து வரும் ஜனாதிபதி அதிகாரமற்றவராக இருப்பார்.
பாதுகாப்பு அமைச்சுக்கூட அவர் வசம் இருக்காது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.
எனவே வலிமையான பிரதமர் ஒருவரை தெரிந்தெடுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை இலங்கையின் அரசியலமைப்பை நன்கு தெரிந்த சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர்.
சட்டத்தரணி மனோஹரா டி சில்வா இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளார்.
19வது திருத்தத்தின்படி பொதுமக்கள் வழங்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கும். அதில் பாதுகாப்பு அமைச்சும் உள்ளடங்கியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க