இலங்கையில் உள்நாட்டு போரினால் யாழ்ப்பாணமே அதிகமாக பாதிப்படைந்தது.
இதே யாழ்ப்பாணம் இன்னும் சில வருடங்களில் இலங்கையின் சுற்றுலா வலயமாக மாறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த பிரதமர் யாழ்.மாநகர சபை மண்டபத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.அதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
யாழ்ப்பான மாநகர சபை மண்டபம் இங்குள்ள கலை,கலாசார அம்சங்களுடம் மிகவும் அழகான தோற்றத்தில் அமையும்.
யாழ்ப்பணத்தில் நல்லூர் கந்தன் ஆலயம் எவ்வாறு அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றதோ அதே போல இந்த கட்டிடமும் அமையும்.
இது வெறுமனே கட்டிடம் அல்ல யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திருப்பு முனையில் ஆரம்ப வேலைத்திட்டமே.
யாழ்ப்பாணம் எண்பது இலங்கையிலேயே முக்கயமான இடமாக கூறப்படுகின்றது.
இலங்கையில் தமிழர்களின் கேந்திரம் நல்லூர் என்றே கூறவேண்டும்.நாம் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
அவை அனைத்தும் இந்த ஆட்சிலேயே முன்னெடுக்கப்பட்டது.
இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாம் எதையும் செய்யவில்லை என ஆரம்பத்தில் கூறி வந்த சிலர் மௌனமாக உள்ளனர்.
நாம் அபிவிருத்தியில் படிப்படியாக முன்னேறி பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இப்போது முன்னெடுத்து வருகின்றோம்.
பலாலி விமான நிலையம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதனை நாம் பலாலி விமான நிலையம் என்று கூறுவதை விட யாழ்ப்பாண விமான நிலையம் என்று கூறலாம்.
இந்த விமான நிலையத்தில் இருந்து ஆரம்பத்தில் இந்தியாவிற்கான விமான சேவைகள் இடம்பெற்றாலும் கால போக்கில் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் விமான சேவைகள் இடம்பெற்றால் சுற்றுலாத்துறை அதிகரிக்கும்.
குறிப்பாக யாழ்ப்பாணம் சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் அடையும்.அதற்கு நாம் இங்குள்ள தீவுப் பகுதிகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என ஆராய்ந்து வருகின்றோம்.
எதிர்காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணம் சுற்றுலா வலயமாக மாறும்.அத்துடன் இங்கு பொருளாதார விருத்தியை முன்னெடுக்க காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வுள்ளோம்,சீமெந்து தொளில்ற்சாலையை மீள இயக்கவுள்ளோம்.
குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனையும் அதிகமாக உள்ளது.அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.
இங்குள்ள கடற்தொளிலார்கள் கடற்கரை பகுதிகளில் மட்டும் சென்று தொழில் செய்கின்றனர்.
அவர்கள் நவீன முறைக்கு மாற வேண்டும்.ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட முன்வரவேண்டும் என்றார்.
கருத்து தெரிவிக்க