அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்பில் வெளியான காணொளி, மைத்ரிபாலவின் அனுமதியின்றியே ஒளிபரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
இது அரசாங்கம் என்ற வகையில் ஒழுக்கமான செயற்பாடு அல்ல என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
தமது அரசாங்கத்தின் பிரதமரையே ஜனாதிபதி விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவை வினவ அவர் குறித்த காணொளி ஜனாதிபதி ஊடகத்தினால் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் ஜனாதிபதியின் ஊடகத்திடம் வினவியபோது அங்கிருந்து உரிய பதில்கள் கிடைக்கவில்லை.
இதன்போது ஊடகத்தின் பணிப்பாளரை ஜனாதிபதி கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க