ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பரப்புரை நடவடிக்கைகள் ஆரம்பமான பின்னர் கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இரகசியப் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துஇ கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர். அதேபோல் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் மஹிந்த அணி பக்கம் தாவவுள்ளனர்.
அதேபோல் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவுள்ளனர் என்றும்இ ஐ.தே.கவைவிட்டு வெளியியேறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும் தாய்வீடு திரும்பவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கும் பட்சத்தில் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஐ.தே.கவுடன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும்இ கண்டி மாவட்டத்திலுள்ள ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் திஸ்ஸ அத்தாநாயக்கவுக்கு கதவடைப்பு செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளைஇ மலையகத்திலும் பிரதேச மட்டத்தில் அரசியல் குத்துக்கரணம் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தென்படுகின்றன.
கருத்து தெரிவிக்க