புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை அணி வெற்றி. தொடரை நியூஸிலாந்து வென்றது

இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

எனினும் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2க்கு 1 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடி 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 88 ஓட்டங்களை பெற்றது.

இன்றைய போட்டியில் லசித் மாலிங்க 6 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

கருத்து தெரிவிக்க