விளையாட்டு செய்திகள்

மும்பாய் இந்தியன், கொல்கத்தா நைட்ரைடர்ஸை வெளியேற்றியது.

இந்திய ஐபிஎல் போட்டிகளில் இன்று மும்பாய் இந்தியன் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது.

அதேநேரம் சென்னை சுப்பர்கிங்ஸ் அணியை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிக்கொண்டது.
எனினும் இது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது.

இன்றைய தோல்வியின் காரணமாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, போட்டித்தொடர்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 133 ஓட்டங்களை பெற்றது.
மும்பாய் இந்தியன் அணி, ஒரு விக்கட் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

கருத்து தெரிவிக்க