ஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாச அவர்களின் பெயரை அனைத்து மக்களும் உச்சரித்து இன்று ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
இதணை ஐ.தே.க பாதுகாத்து கொள்ள வேண்டும். ஐ.தே.க எடுக்கும் தீர்மாணங்களினால் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்து விடக் கூடாது.
இதுவே மக்களிளது எதிர்பார்ப்பாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விஷேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் தெரனியகல இழுக்குதென்ன தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கேகாலை மாவட்ட அமைப்பாளரும் விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் உதவி செயலாளருமான ஜீ.ஜெகநாதன் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தோட்ட முகாமையாளர் உட்பட தோட்ட அதிகாரிகள், பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர்,
தற்போது நாட்டில் சூடு பிடித்துள்ள விடயம் தான் ஜனாதிபதி தேர்தல். இந்த தேர்தலுக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது வேட்பாளர் யார் என்று உறுதியாக சொல்லி உள்ளது.
பொதுஜன பெரமுன கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை அறிவித்துள்ளது.
இவருக்கு எதிராகவும் எதிர்காலத்தில் வழக்குகள் இருப்பதாக தெரிகின்றது. இதில் என்னவாகும் என்று தெரியாது.
சுதந்திர கட்சியும் இதுவரை யாரைம் ஜனாதிபதி வேட்பாளராக கூறவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியும் இது வரைக்கும் உத்தியோகபூர்வமாக யார் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறவில்லை கட்சிக்குள் இழுப்பறி நிலையும் குழப்பமும் காணப்படுகின்றது.
இந் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச அவர்களில் அலை அனைத்து மக்களின் உச்சரிப்பில் அவரை வெற்றிபெற வைத்து ஐக்கிய தேசிய கட்சியையும் வெற்றிபெற வைத்துள்ளதாக தெரிகின்றது.
இந் நிலையில் ஐக்கிய தேசிய கட்சி நிதானமாக செயற்பட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். இதனை மலையக மக்கள் முன்னணி சார்பாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாகவும் வலியுறுத்தியும் உள்ளோம். அதே போல் முஸ்லிம் கட்சிகளும் வலியுறுத்தி உள்ளனர்
இந்த நாட்டில் நாம் சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள கொடுப்பனவை கூட இன்னும் கொடுக்கவில்லை.
அதேபோல் வடகிழக்கு மக்களின் இன பிரச்சனைகள் இன்னும் தீர்த்து வைக்கபடவில்லை. இந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் இதற்கான தீர்வுகளை முன் வைப்பதாக கூறினர்.
அதுவும் நடைபெறவில்லை. தற்போதும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றது. எதிர்காலத்திலும் இந்நிலை தொடர்ந்து இருக்க முடியாது.
இதற்கான உரிய தீர்வு வேண்டுமானால் பொருத்தமான ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும். பொருத்தமான ஒருவரையும் தெரிவு செய்ய வேண்டும்.
தற்போது சரியான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக யாரும் தெரிவு செய்யபடாததால் நாங்களும் யாரை ஆதரிப்பது என்ற ஒரு முடிவு இன்றி இருக்கின்றோம் என்று மேலும் கூறினார்.
கருத்து தெரிவிக்க