வவுனியா ஓமந்தை பாலமோட்டைப் பகுதில் இன்று அதிகாலை சட்டவிரோத முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனத்தை வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா ஓமந்தை பாலமோட்டைக் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் செல்வதாக விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து குறித்த இடத்திக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈபட்டனர்.
இதன்போது கப் ரக வாகனத்தில் முதிரைக்குற்றிகள் ஏற்றிக் கொண்டு சென்ற இனம் தெரியாதவர்களை விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றபோது மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் காட்டுப் பகுதிக்குள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இதே வேளை அனாதரவாக விடப்பட்ட நிலையிலிருந்த கப் ரக வாகனத்தையும், 7 அடி நீளமுடைய 12 முதிரைக்குற்றிகளையும் பொலிஸார் புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றி ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க