உள்நாட்டு செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே உதவும்;;- மஹிந்த ராஜபக்ச

அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் இலங்கையர்களுக்கு இருக்கும் தொடர்புகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமையும் என்று அரசாங்கம் கூறுகிறது.

எனினும் இந்த சட்டத்தினால் சாதாரணப் பொதுமக்களே பாதிக்கப்படுவர்.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், குறைந்தளவு தண்டனைகளுக்கே உள்ளாக்கப்படுவர்.

னவே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாதத்தை ஊக்கவிக்குமே ஒழிய கட்டுப்படுத்தாது என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணைகள். ஒரு வருடக்காலப்பகுதிக்குள் முடிவடையாதுபோனால்,சந்தேகநபர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வாய்ப்புள்ளது.

இந்தநிலையில் புதிய சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், அது கொழும்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை பாதிக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சட்டம் சாதாரண மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளுக்கு வழியேற்படுத்தும்.
அத்துடன் கருத்துச்சுதந்திரத்துக்கும், எதிர் அரசியல் மீது கடுமையான நடவடிக்கைக்கும் வழிவகுக்கும்.

புதிய சட்டத்தின்படி ஆயிரம் பேரை கொலை செய்த பயங்கரவாத குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை மாத்திரமே வழங்கப்படும்.

எனினும் இலங்கையின் சாதாரண சட்டம், ஒருவரை கொலை செய்தவருக்கு மரணத்தண்டனையை பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குஉதவுபவருக்கு சாதாரண சட்டத்தின்கீழ் மரணத்தண்டனை விதிக்கமுடியும்.

எனினும் புதிய பயங்கரவாத எதி;ர்ப்பு சட்டத்தின்கீழ், 15 வருட சிறைத்தண்டனையும்,ஒரு மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க