தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி கனிஷ்க ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 22வது தலைவரான சட்டத்தரணி கனிஷ்க ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இளைஞர்களின் ஆலோசனைகள் மற்றும் அபிப்பிராயங்களைப் பெற்று புதிய வேலைத்திட்டங்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக மன்றத்தின் புதிய தலைவர் கனிஸ்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வினைத்திறன் மிக்க இளைஞர், யுவதிகளை உருவாக்குவது இளைஞர் சேவை மன்றத்தின் இலக்கென கனிஸ்க ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மன்றத்தின் பணிப்பாளராக தான் கடமையாற்றியபோது, பெற்ற அனுபவங்களை இதற்காக பயன்படுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எரந்த வெலிஅங்கே உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க