” புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும். இதற்கு கட்சியின் மத்திய செயற்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.”
-இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி எந்த கட்சியாலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க