உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வாக்காளர் பெயர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீட்டை முன்வைக்க கால அவகாசம்

வாக்காள் பெயர் இடாப்பில் தமது பெயர்கள் இல்லாவிடின் அது தொடர்பில் மேன்முறையீடை முன்வைக்க முடியுமென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ம் திகதி வரை இதற்கனெ காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெயர் பதிவில் தவறுகள் இருப்பின் அது தொடர்பிலும் அறிவிக்கமுடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளல் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2019 ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உள்ளடக்குமாறு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

www.electiongov.lk என்ற தமது இணையத்தளத்தில் பெயர்ப்பட்டியல் தொடர்பில் அறிந்து கொள்ளமுடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் மாகாண சபைகளிலும் பெயர்ப் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.

மாவட்ட செயலாளர் அலுவலகத்திலுள்ள முழுமையான பெயர் இடாப்பு பட்டியலையும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க