ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 68 ஆவது மாநாடு கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (03) நடைபெறவுள்ளது.
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதியே சுதந்திரக்கட்சி உதயமானது. வழமையாக 2 ஆம் திகதியே கட்சி மாநாடு நடத்தப்படும். இம்முறையும் அதே திகதியில் நடத்துவதற்கே முன்னதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாள் செப்டம்பர் 3 ஆம் திகதியாகும். இதன்காரணமாகவே மாநாட்டை அன்றைய தினம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்சி மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் நாளைய உரையில் அதிகாரபூர்வமாக ஜனாதிபதி எதையும் அறிவிக்கமாட்டார் என சு.க. வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
கருத்து தெரிவிக்க