பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (02) மாலைதீவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளும் நிலையில், பதில் பிரதமராக அமைச்சர் லக் ஷ்மன் கிரியல்ல செயற்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை அடுத்து, நாடாளுமன்றத்தில் ஐதேகவின் மூத்த தலைவராக – சபை முதல்வராக கிரியெல்லவே இருக்கிறார். இந்தநிலையிலேயே அவர் பதில் பிரதமராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு செல்லும் பிரதமர் எதிர்வரும் 5 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
நாடு திரும்பிய கையோடு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திலுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.
அதன்பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவார் என ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க