உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அமரிக்காவில் தடையுத்தரவை கோரும் கோட்டாபய

அமரிக்காவில் தமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தடையுத்தரவை வழங்கவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு அமரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி இந்த மனு தாக்கல் செய்யபபட்டது.

2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உட்பட்டவர்களின் நீதியற்ற கொலைகளில் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் கோட்டாபய மீது அமரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த வழக்கு காரணமாக இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை.

எனவே பிரசாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவே இடைக்கால தடையுத்தரவு மனு தாக்கல் செய்யப்பட்டது என்ற தகவல் பொய்யானது என்று கோட்டாபயவின் பேச்சாளர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க