தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மெல்பேர்னில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை 11வது மணித்தியாலத்தில் தடுக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்தக்குடும்பம் டார்வினில் தங்கவைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவிலிருந்து குறித்த குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளதாக பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுப்பதற்காக போராடும் home to Bilo குழு தெரிவித்துள்ளது.
நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்;திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களும் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த குடும்பம் பலரது எதிர்ப்பையும் மீறி விமானத்தில் ஏற்றப்பட்டது.
எனினும் விமானம் டார்வினைச் சென்றடைந்த போது நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவின்படி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் இரண்டாவது மகள் தருணிகாவை மையப்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த இடைக்காலத்தடையை விதித்திருந்தது.
இதனையடுத்து இந்தக்குடும்பம் இரவோடிரவாக கிறிஸ்மஸ் தீவு இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டுசெல்ப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் உள்துறை அமைச்சிடம் கருத்துக்கேட்டபோது இவ்விவகாரம் நீதிமன்றத்தின் முன்பாக இருப்பதால் பதிலளிப்பது சரியாகாது என குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நீதிமன்ற அமர்வில் பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தல் விவகாரத்திற்கு இறுதி முடிவு எட்டப்படும
இதேவேளை பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுத்து அவர்களை மீண்டும் Biloelaவில் வாழ அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் நாளை ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு நாடுதழுவியரீதியில் ஆர்ப்பாட்டமொன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க