நாட்டின் முக்கிய 3 தலைவர்களுக்கும் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற போர்வையில், தேர்தலை தாமதப்படுத்தலாமென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம். நிஸாம் காரியப்பர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
,“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் திரைமறைவில் முயற்சிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை வன்மையாக எதிர்ப்போம்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பில்லை.
இதனால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்பட வாய்ப்பு காணப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க