உள்நாட்டு செய்திகள்புதியவை

6 இலட்சம் பெறுமதியான சிகரெட் கடத்தியவர் கைது

6 இலட்சம் பெறுமதியான 10 ஆயிரம் சிகரெட்டுகளை கடத்தி வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் டுபாயில் இருந்து நேற்று இரவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க