இத்தாலியின் மவுண்ட் ஸ்ட்ராம்போலி (Mount Stromboli) தீவில் உள்ள எரிமலை கடந்த சில வாரங்களாக பெரும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வெடித்துச் சிதறும் இந்த எரிமலைக்கு மிக அருகில் சென்ற படகோட்டி ஒருவர் அதன் தூசு மற்றும் சாம்பலில் சிக்கி இருந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன .
இதன் புகையும், சாம்பலும் சுமார் 2 கிலோ மீட்டர் உயரத்திற்கு விசிறியடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எலனா சியரா (Elena Schiera) என்ற இளைஞன் படகு மூலம் தனது நண்பர்களுடன் எரிமலைக்கு அருகே சென்றுள்ளார்.
அப்போது வாயுக்களையும், சாம்பல் மற்றும் நெருப்புக்குழம்பு நிறைந்த பாறைகளையும் எரிமலை கடலுக்குள் தள்ளிக் கொண்டிருந்தது.
திடீரென வெடிப்பு அதிகம் ஏற்பட்டதால் பேரரக்கன் போல சூழ்ந்த கரும்புகை எலனாவின் படகை நோக்கி வந்தது. இதையடுத்து படகை விரைவாகச் செலுத்தி அந்தக் குழுவினர் தப்பித்து வந்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க