வெளிநாட்டு செய்திகள்

டொரியன் புயல் குறித்து ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் டொரியன் புயலுக்கு முன்னெச்சரிக்கையாக மக்களை வெளியேற்றுவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பலத்த சூறைக்காற்றுடன் புயல் காரணமாக கனமழையும் கொட்டி வருவதால் வரும் நாட்களில் அது கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை அது ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பஹாமாஸ் தீவுகளின் வடமேற்கு பகுதியில் அது மையமிட்டு புளோரிடா தீபகற்பத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.புயல் வலுப்பெற்று வருவதால் பலத்த காற்றுடன் அது கரையைக் கடந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பதோடு கதவுகள் ஜன்னல்களை மூடிவைத்துள்ளனர். உணவுப்பொருட்கள், குடிநீர்,சமையல் எரிவாயு, ஜெனரேட்டர்கள் போன்றவற்றை தேவையான அளவுக்கு சேகரித்து வைத்துள்ளனர். ஒருவாரத்திற்கு தேவையான கையிருப்பை வைத்திருக்குமாறு புளோரிடா ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். புயல் காரணமாக புளோரிடா வில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க