ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
அலரிமாளிகையில் நேற்றிரவு (29) நடைபெற்ற இந்த இரகசிய சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல், புதிய அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன், தம்மால் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை சஜித் பிரேமதாச ஏற்கும் பட்சத்தில் , ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு பிரதமர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை மாலைதீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் நாடு திரும்பியதும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
அதேவேளை, சபாநாயகர் கருஜயசூரியவுக்கும், சஜித் பிரேமதாசவுக்குமிடையிலும் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கருத்து தெரிவிக்க