இலங்கைக்கு வருகை தந்துள்ள கன்டபெரி பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆண்டகை பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் குறித்த ஆலயத்தில் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் அவர் அங்கு விஜயம் செய்த கன்டபெரி பேராயரை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவரை வரவேற்றுள்ளார்.
பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆண்டகை, விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
குண்டுத் தாக்குதல் செய்தியை கேட்டு தாம் பெரும் அதிர்ச்சியடைந்ததோடு வேதனைக்குள்ளானதாக இதன்போது பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இலங்கை வந்துள்ள பேராயர் ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை சனிக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க