ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பு உருவாக்கபட்டுள்ளது. கூட்டணி முறையாக கைச்சாத்திடப்படும் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க