கராச்சி வான் பரப்பின் 3 விமான வழிப்பாதைகளை பாகிஸ்தான் மூடியுள்ளது.
பாலகோட் பயங்கரவாத முகாமில் இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து மூடிய விமான வழிப்பாதையை சில நாடுகளுக்காக திறந்த போதிலும் இந்தியாவுக்கு தடையை தொடர்ந்தது.
இந்நிலையில் ஜூலை 16-ந் திகதி, இந்திய விமானங்களுக்கு தனது பாதையை முழுவதுமாக திறந்து விட்டது.
இதற்கிடையே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததால், இந்திய விமானங்களுக்கு தனது பாதையை முற்றிலுமாக மூடுவது பற்றி பாகிஸ்தான் அமைச்சரவை ஆலோசனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து கராச்சி நகருக்கு மேலே 3 விமான வழிப்பாதைகளை பாகிஸ்தான் மூடியுள்ளது. நேற்று முதல் 31-ந் திகதி வரை 4 நாட்களுக்கு இத்தடை அமுலில் இருக்கும். இதனால் சர்வதேச விமானங்கள், கராச்சியை சுற்றி மாற்று வழியில் செல்ல வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க