ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்று இரவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜனா பெரமுன (எஸ்.எல்.பி.பி) ஆகியவை எதிர்கால தேர்தல்களில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதேவேளை எஸ்.எல்.எஃப்.பி மற்றும் எஸ்.எல்.பி.பி ஆகியவை நேற்று காலை பேச்சுவார்த்தைக்காக கூடியிருந்தது.
இரு தரப்பினருக்கும் இ டையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும், கட்சித் தலைவர்கள் மேலதிக விவாதங்களுக்கு சந்திப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.
வருங்காலத் தேர்தல்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியில் சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெறமுன் ஆகியவை பல சுற்று விவாதங்களை நடத்தியுள்ளன.
கருத்து தெரிவிக்க