எதிர்காலத்தில் ஐந்து விடயங்கள் தொடர்பான சட்டங்களில்நிதி அமைச்சு திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
அவற்றில் மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டம், தேசத்தைக் கட்டியெழுப்பும் சட்டம், பொருளாதார சேவை கட்டண சட்டம், உள்நாட்டு வருவாய் சட்டம் மற்றும் சூதாட்ட மற்றும் விளையாட்டு வரிச் சட்டம் ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் சில திட்டங்களை செயல்படுத்த மேற்படி சட்டங்களில் திருத்தப்பட வேண்டும் என நிதியமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை ஆய்வறிக்கையிள் குறிப்பிடப்பட்டுள்ளது .
குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை நேற்று (ஆக .27) ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்து தெரிவிக்க