மட்டக்களப்பில் போசனைக் குறைவால்தான் கால்நடைகள் அண்மையில் இறைப்பைச் சந்தித்துள்ளது.
கால்நடைத் திணைக்களம் பண்ணையில் உள்ள கால்நடைகளை பதிவு செய்துகொள்வதற்கு கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
கால்நடைகளை பதிவு செய்து முறையான திட்டமிடலுடன் மட்டக்களப்பில் விவசாயத்தையும், கால்நடை உற்பத்தியையும் வளர்த்தெடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டமானது செவ்வாய்க்கிழமை (27) மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில் …
எதிர்வரும் பெரும்போக விவசாயக் செய்கைக்கான ஆரம்பக்கூட்டங்கள் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
விவசாயக் செய்கை மேற்கொள்ளும் போது விவசாயம் செய்கை பண்ணப்படும் இடத்திலிருந்து 3கிலோ மீற்றருக்கு அப்பால் கால்நடைகளை அப்புறப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள், அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது,காட்டுயானைகளை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காட்டுயானைகளுக்கு கட்டுப்படுத்துவதற்கு நடப்பாண்டில் வனபரிபாலன சபை திணைக்களத்தால் 125 கிலோ மீற்றர் நீளமான யானை வேலிகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் காட்டுயானைகளை கட்டுப்படுத்துவதற்கு யானைவேலிகள் அமைக்கப்பட்டும் யானைவேலிகள் களவாடப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து யானை வேலிகளை பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும்.
இவ்வாறு முன்வரும் போது காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்களையும், உயிர்ச்சேதங்களையும் எம்மால் தவிர்க்கமுடியும்.
மட்டக்களப்பில் யானைவேலிகளை அமைப்பதால் மட்டும் யானைப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்து விடாது
.யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர்களுக்கும் முறையாக அறிவுறுத்துதல்கள்,ஆலோசனைகள் வழங்கியுள்ளேன்.
உன்னிச்சைக்குளத்தில் 8அடி உயரத்தில் தண்ணீர் இருக்கின்றது.நீர் முகாமைத்துவத்திற்கு ஏற்றாற்போல் விவசாயம் மேற்கொள்ள வேண்டும்.
விவசாயம் செய்கையை மட்டக்களப்பில் ஊக்குவிப்பதற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும்,நாட்டிலும் எதிர்காலத்தில் வரட்சியை தாக்குப்பிடிப்பதற்கு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.
விவசாயிகள், பொதுமக்கள்,பண்ணையாளர்கள் இணைந்து தூர்ந்து போன குளங்களை மீள்புனரமைப்பு செய்து முறையாக நீர் முகாமைத்துவத்துடன் மழைநீர் சேகரிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பில் தூர்ந்துபோன கால்வாய்கள்,குளங்கள்,நீர்நிலைகள் மீள்புரமைப்பு செய்யப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டு வரட்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
மட்டக்களப்பில் 25.7வீதமாக இருந்த காடுகள் அழிக்கப்பட்டு 17.9 வீதமாக தற்போது குறைவடைந்துள்ளது.
காடுகளின் அடர்த்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள்,பண்ணையாளர்கள்,வன பரிபாலன திணைக்களம் இணைந்து நீர் முகாமைத்துவத்தையும்,வரட்சியையும் நிலையான முறையில் பேணுவதற்கு மரங்கள் நாட்டி காடு வளத்தை பாதுகாக்க வேண்டும்.
மட்டக்களப்பில் கால்நடை அபிவிருத்திக்காக 38.04 மில்லியன் ரூபா நிதியில் கால்நடை உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்டத்தில் புற்களைவளர்த்தும்,சுத்தமான குடிநீரையும்கொடுத்தும், போசனைகளை கால்நடைகளுக்கு ஊட்டி வளர்பதன்மூலம் கால்நடைகளின் இறப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.மட்டக்களப்பில் போசனைக்குறைவால்தான் கால்நடைகள் அண்மையில் இறைப்பைச் சந்தித்துள்ளது.
கால்நடைத் திணைக்களம் பண்ணையில் உள்ள கால்நடைகளை பதிவு செய்துகொள்வதற்கு கூடிய கவனம் செலுத்த வேண்டும்.கால்நடைகளை பதிவு செய்து முறையான திட்டமிடலுடன் மட்டக்களப்பில் விவசாயத்தையும்,கால்நடை உற்பத்தியையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
கால்நடைகனை முறையாக கண்காணித்து கால்நடைகளின் எண்ணிகையை மட்டுப்படுத்தி நல்லின கால்நடைகளை ஊக்குவிக்க வேண்டும்.
279,000 கால்நடைகள் முறையாக பதிவு செய்யப்படாமல் உள்ளது.
எனவே கால்நடை பண்ணையாளர்கள் பதிவு செய்வதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க