சஜித் ஆதரவு அணி அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, அஜித் பி. பெரேரா ஆகியோருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கட்சி தலைமைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து கட்சியின் யாப்பைமீறும் வகையில் செயற்பட்டதாலேயே இருவரிடமும் விளக்கம் கோருவதற்கு ஒழுக்காற்று நடவடிக்கை குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் கடிதம் மேற்படி இரு அமைச்சர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளரால் இன்று (27) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கட்சி யாப்பின் 6 சரத்துகளை அப்பட்டமாகமீறும் வகையில் இருவரும் செயற்பட்டுள்ளனர் என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்க வேண்டும் என சுஜீவ சேனசிங்கவும், அஜித் பி. பெரேராவும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க