உள்நாட்டு செய்திகள்புதியவை

அமைச்சர் றிஸாட் பதியுதீன்,சாள்ஸ் நிர்மலநாதன் இடையே வாய்த்தர்க்கம்

என் மீது நீ தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு இருக்கின்றீர். உனக்கு நான் யார் என்று மிக விரைவில் காட்டுவேன் என தன்னை அமைச்சர் றிஸாட் பதியுதீன் எச்சரித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தர்.

நிகழ்வொன்றின் சிறப்பு விருந்தினர் தொடர்பில் கேட்டபோது அமைச்சர் றிஸாட் பதியுதீன் தரமற்ற வார்த்தை பிரையோகத்தை தொடர்ச்சியாக முன் வைத்தார்.

மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதி நிதி என்ற மன நிலை இல்லாமல் நீ,நான் என்ற வார்த்தை பிரையோகத்தை முன் வைத்தார்.

-பிரதம விருந்தினராக யாரை அறிவித்தாலும் உனக்கு என்ன? நீ சத்தம் இல்லாமல் இரு என்று அதிகாரத் தொணியில் அவருடைய வார்த்தை பிரையோகம் இருந்தது என தெரிவித்தார்.

மேலும் தான் தாழ்மையான பதிலுடன் வெலியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார், மறிச்சிக்கட்டி கமநல சேவை நிலையத்தின் திறப்பு விழாவில் மேற்படி வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ஹரிசனிடம் நீங்கள் பிரதம அதிதி என்பதாலேயே தான் இந்த நிகழ்விற்கு வருகை தந்தேன் என கூறியுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க