இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் 24 மற்றும் 25 திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் தபால் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான ஏப்ரல் 28 மற்றும் 29ம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க