கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் மோசமான நிலையை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேல் மாகாண ஆளுநர் ஏ ஜே எம் முசம்மில் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கட்டிடம் நோயாளிகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆளுநர் அலுவலகம், வெளியிட்ட அறிக்கையில் . ஆளுநர் முசம்மில், கடந்த சனிக்கிழமைவைத்தியசாலைக்கு மேற்கொண்ட ஆய்வு சுற்றுப்பயணத்தின் போது,அங்குள்ள குறைப்பாடுகளை கண்டறிந்துள்ளார்.
மிகவும் தேவையான புனரமைப்பு தேவைகளில் பழைய ஏர் கண்டிஷனிங் அமைப்புகள் மற்றும் லிஃப்ட், சேதமடைந்த தீ பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கட்டிடத்தில் நீர் கசிவு சிக்கல்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று லிஃப்ட் வழங்கவும் , கட்டிடத்தில் உள்ள பிற சேதங்களை மீட்டெடுக்கவும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். “இந்த சேவைகளை தாமதப்படுத்த முடியாது எனவும் இது மனித வாழ்க்கையை பாதிக்கும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
மேலதிக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக மருத்துவமனை கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப அறிக்கையை நாடுவதாகவும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க