இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
முதல் இரண்டு நாட்கள் மழையால் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது . 9 ஓட்டங்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த தனஞ்ஜெய டி சில்வா தனது 5-வது சதத்தை (109 ஓட்டம் , 148 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) எட்டினார்.
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்களை எடுத்துள்ளது.
தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்த தொடக்க ஆட்டக்காரர் டொம் லாதம் 111 ஓட்ட களுடன் (184 பந்து, 10 பவுண்டரி) களத்தில் உள்ளார்.இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
கருத்து தெரிவிக்க