அழகு / ஆரோக்கியம்

தலை முடி வளர்ச்சிக்கு உதவும் தயிர் !

தலைமுடி வளர்ச்சிக்கு தயிர் பெரும் பங்கு வகிக்கிறது என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.  உண்மைதான். அதனை எவ்வாறு பயன்படுத்தினால் நன்மை தரும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. தயிருடன் சிறிது தேன் கலந்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளித்தால் தலைமுடி மிகவும் மென்மையாக இருக்கும்.

2. தயிரை கிழமையில் இரண்டு தரம் பாவித்து வந்தால் தலைமுடியில் வெடிப்புகள் இல்லாமல் வலிமையுடன் இருக்கும்.

3. தயிருடன் தேசிப்பழச் சாறு கலந்து தலைமுடியில் நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

4. தயிருடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து அரைத்து முடியில் பூசிக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

5.  தயிருடன் சிறிது தேங்காய் எண்ணெய், செவ்வரத்தம் பூ சேர்த்து அரைத்து முடியில் பூசிக் குளித்தால் முடி அடர்த்தியாக நீண்டு வளரும்.

கருத்து தெரிவிக்க