இலங்கையில் கொரோனா தாக்கத்தினால் உலக பொருளாதாரத்தின் அடிப்படையில் இலங்கை பலத்த பின்னடைவினை அடைந்துள்ளது. அந்த அடிப்படையில் தற்போது இலங்கையில் பொதுத் தேர்தல் அவசியமற்ற ஒன்று என எதிர்கட்சிகள் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் வர்த்தமானி அறிவித்தல் ஜீன் 2ம் திகதியுடன் காலாவதியாகிவிடும். ஏனெனில் அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மூன்று மாதங்கள் வரையே செல்லுபடியாகும். ஆகவே, வர்த்தமானி காலாவதியானவுடன் நாடாளுமன்றத்தினை மீளக் கூட்டும் அதிகாரம் சபாநாயகர் வசம் செல்லவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் வர்த்தகமானி அறிவிப்பு காலாவதியாகாது என்றே சட்டமா அதிபர் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். எனினும், ஜீன் 2ம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் சபாநாயகர் வசம் தான் உள்ளது என்ற கட்டளையை உயர் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க